மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசு அலுவலர்கள் கடமையாற்ற வேண்டும் - கலெக்டர்
திருவாரூரில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசு அலுவலர்கள் கடமையாற்ற வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூரில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசு அலுவலர்கள் கடமையாற்ற வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் மனித உரிமைகள் தொடர்பாக உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
எவ்வித வேறுபாடுமின்றி அனைவரின் மனித உரிமைகளையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும். மேலும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசு அலுவலர்கள் கடமையாற்ற வேண்டும்.
ஆயத்தமாக...
எண்ணம், சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவித செயல்களையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்ய கூடாது. மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பாலச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மணிவேலன், உதவி ஆணையர் (கலால்) அழகிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.