வாழ்ந்து காட்டுவோம் திட்டப்பணிகளை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு
கடையம் அருகே வாழ்ந்து காட்டுவோம் திட்டப்பணிகளை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
தென்காசி
கடையம்:
கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தி வரும் பணிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான தொழிலாளர் பணிபுரியும் இடங்களை அவர் பார்வையிட்டார்.
சேவாலயா அறக்கட்டளையின் சார்பாக கடந்த வருடம் சேவாலயாவின் செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் திறப்பு விழாவில் பங்கேற்ற மாவட்ட கலெக்டரின் புகைப்படம் பொறித்த இந்த ஆண்டு நாட்காட்டியை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் முகமது உசேன், துணைத் தலைவர் நாகலட்சுமி சங்கிலி பூதத்தான், பொட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், ஊராட்சி செயலாளர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story