குண்டாறு அணையில் படகில் சென்று கலெக்டர் ஆகாஷ் ஆய்வு


குண்டாறு அணையில் படகில் சென்று கலெக்டர் ஆகாஷ் ஆய்வு
x

குண்டாறு அணையில் படகில் சென்று கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சகம், குண்டாறு அணைப்பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கு ரூ.1.50 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. மேலும் குண்டாறு அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்ல ஏதுவாக பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று குண்டாறு அணைக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்வதற்காக வந்தார். பின்னர் அணை பகுதிகளை சுற்றி பார்த்தார். தொடர்ந்து அணையில் அதிகாரிகளுடன் படகு சவாரி செய்தார். இதையடுத்து அணைப்பகுதியில் உள்ள கார் பார்க்கிங் இடம் வசதிகள் குறித்தும், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story