கலெக்டர் ஆகாஷ் ஆய்வு


கலெக்டர் ஆகாஷ் ஆய்வு
x

குற்றாலத்தில் சாரல் திருவிழா ஏற்பாடு தீவிரம்- கலைவாணர் கலையரங்கை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு

தென்காசி

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சாரல் திருவிழா வருகிற 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக இங்குள்ள கலைவாணர் கலையரங்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரங்கம் புதிய பொலிவுடன் காணப்படுகிறது. தற்போது இந்த அரங்கம் முழுவதும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேற்று பார்வையிட்டார். கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் மேடை, சுற்றுலா பயணிகள் அமரும் இடம், அரங்கத்தின் வெளியே பல்வேறு அரசு துறை சார்பில் சிறிய அரங்குகள் அமைக்கப்படும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், தென்காசி உதவி கலெக்டர் கெங்கா தேவி, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) மாணிக்கராஜ், தலைவர் கணேஷ் தாமோதரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story