நீலகிரி மாவட்டத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்-கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்


நீலகிரி மாவட்டத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்-கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:30 AM IST (Updated: 15 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

குடற்புழு நீக்க தினம்

நீலகிரி மாவட்டம், ஊட்டி வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:- 1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்திலும் வழங்கப்படுகிறது. ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ½ மாத்திரை அல்லது 5 மில்லி லிட்டர் அல்பெண்டசோல் திரவமும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும், ஒரு நபருக்கு ஒரு மாத்திரை வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

2¼ லட்சம் குழந்தைகளுக்கு....

நமது மாவட்டத்தில் இந்த மாத்திரைகள் அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு துணை சுகாதார மையங்கள், பள்ளிகள், கல்லூரிகளிலும் 486 அங்கன்வாடி பணியாளர்கள் 216 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 413 ஆஷா பணியாளர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் நேரடியாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் 2,30,869 குழந்தைகளும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள் 52,982 பேரும் பயன் பெறுவார்கள். அல்பெண்டசோல் மாத்திரையை உட்கொள்வதால் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதுடன் ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் தகுதி வாய்ந்த பெண்கள் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகின்றது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன், நகர் நல அலுவலர் ஸ்ரீதர் சுகாதார அலுவலர்கள் உளபட பலர் கலந்து கொண்டனர்.


Next Story