சான்றிதழ் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு


சான்றிதழ் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
x

செயற்கைக்கோள் அறிவியல் பயிற்சியில் சான்றிதழ் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக் கல்வித் துறை மூலமாக செயற்கைக்கோள் அறிவியல் பயிற்சியில் பங்குபெற்ற ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, திருமால்பூர், மூதூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள், காவேரிப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குருவராஜப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளைச் சேர்ந்த 21 மாணவ - மாணவிகளுக்கும், அப்பள்ளி ஆசிரியர்களான சதீஷ்குமார், ரமேஷ்பாபு, அஜிதா மற்றும் பாலச்சந்தர் ஆகிய 4 ஆசிரியர்களுக்கும் பங்கேற்றமைக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வளர்மதியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story