பாட்டுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கலெக்டர் பாராட்டு


பாட்டுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கலெக்டர் பாராட்டு
x

பாட்டுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கலெக்டர் பாராட்டினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது பெண்களுடைய சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக மக்கள் அமைப்புகளை உருவாக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் பாட்டு போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவர்களில் புனித செபஸ்தியார் மகளிர் சுயஉதவிக் குழுவினர் கலந்து கொண்டு மாநில அளவில் பாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற புனித செபஸ்தியார் மகளிர் சுயஉதவிக்குழுவினர், குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து பாராட்டு பெற்றனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் இலக்குவன் மற்றும் மகளிர் திட்ட உதவி திட்ட அதிகாரி கலைச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story