லெமூர் கடற்கரையில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு


லெமூர் கடற்கரையில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு
x

லெமூர் கடற்கரையில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட இயற்கை அழகு வாய்ந்த பகுதிகளை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லெமூர் கடற்கரை பகுதியை கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். இங்கு கடற்கரைக்கு செல்லும் போக்குவரத்து பாதை மிகவும் குறுகலாகவும், இடையூறாகவும் உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக மாற்று வழி அமைக்கப்படுவது தொடர்பாகவும், ஆலங்கோட்டை பகுதியில் இருந்து புதிதாக சாலை அமைத்து ஒரு வழி பாதை அமைக்க சாத்திய கூறுகள் உள்ளனவா? என்பது குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் லெமூர் கடற்கரை பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவர்களின் நலன்கருதி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கவும், குழந்தைகளின் பொழுதுபோக்குக்கு சிறு பூங்கா அமைத்திடவும், சுற்றுலா பயணிகளை கவரும் பாரம்பரிய உணவு வகைகளுடன் கூடிய உணவு அரங்கம் அமைப்பது குறித்தும், சிறு கடைகள் கட்டுதல் போன்ற சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story