காரிப்பட்டி ரேஷன் கடையில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு
காரிப்பட்டி ரேஷன் கடையில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு நடத்தினார்.
காரிப்பட்டி ரேஷன் கடையில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு நடத்தினார்.
ரேஷன் கடை
சேலம் மாவட்டம் காரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் கலெக்டர் காார்மேகம் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
ரேஷன் கடைகளின் அனைத்து விற்பனை பரிவர்த்தனைகளும் கணினி முறையில் நடைபெறுகின்றன. இதனால் அத்தியாவசிய பொருட்கள் எளிதாக மக்களைச் சென்றடைகிறது.
மாவட்டத்தில் 1,156 முழுநேரம் மற்றும் 448 பகுதி நேரம் என 1,604 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 11 லட்சத்து 226 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
மலைக்கிராமம்
அதன்படி ஒவ்வொரு மாதமும் 13 ஆயிரத்து 119 மெட்ரிக் டன் அரிசி மற்றும் சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 19 ஆயிரத்து 942 டன் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. மலைக்கிராமங்களில் செயல்படும் ரேஷன் கடைகள் மற்றும் நகரும் ரேஷன் கடைகள் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தரமாக வழங்குவதை உறுதி செய்ய தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் குறித்து குறைகள் இருப்பின் அந்தந்த ரேஷன் கடைகளில் தகவல் பலகைகளில் இடம் பெற்றுள்ள அலுவலர்களின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.