பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் கார்மேகம் உத்தரவு


பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறும்  தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை  கலெக்டர் கார்மேகம் உத்தரவு
x

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

சேலம்

சேலம்,

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். பின்னர் அவர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 284 மனுக்கள் ெபறப்பட்டன.

நடவடிக்கை

அதேபோல், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 26 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.

மேலும், பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சத்திய பால கங்காதரன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அமுதன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story