ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு


ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

பெருமுகை ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

வேலூரை அடுத்த பெருமுகையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பள்ளி வளாகத்தை பார்வையிட்டு மாணவர்களின் வசதிக்காக புதிய வகுப்பறைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி வளாகத்தில் குப்பைகள் சேராதவாறு தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். பள்ளியின் சுற்றுச்சுவரை பலப்படுத்தவும், சுற்றுச்சுவர் இல்லாத இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். பள்ளியின் மேல்தளத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது வேலூர் தாசில்தார் செந்தில், பொதுப்பணித்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story