அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு


தினத்தந்தி 18 Aug 2023 10:45 AM IST (Updated: 18 Aug 2023 10:57 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

கோயம்புத்தூர்

கோவை

கோவை புலியகுளம் கிருஷ்ணசாமி நகரில் ரேஷன் கடை செயல்பட் வருகிறது. இந்த ரேஷன் கடையில் நேற்று காலை கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் ரேஷன்கார்டுதார்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் விவரம் குறித்த பதிவுகளை ஆய்வு செய்தார்.

அங்கிருந்த ஊழியர்களிடம் கடையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விபரங்களை கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து புலியகுளம், பெரியார்நகர் அங்கன்வாடி மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த குழந்தைகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். மேலும் ராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பள்ளியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமை கலெக்டர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார்.

இதையடுத்து கலெக்டர் கிணத்துகடவு ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் சமையல் கூடத்தை ஆய்வு செய்த கலெக்டர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து தரத்தை சோதனை செய்தார்.

1 More update

Next Story