விவசாய சங்கத்தினருடன் கலெக்டர் ஆலோசனை


விவசாய சங்கத்தினருடன் கலெக்டர் ஆலோசனை
x

விவசாய சங்கத்தினருடன் கலெக்டர் ஆலோசனை

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பச்சை தேயிலை விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தேயிலை விவசாயிகள், தொழிற்சாலை உரிமையாளர்களின் கருத்துகளை கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பச்சை தேயிலை விலை உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.


Next Story