ஊராட்சி தலைவர்களுடன் கலெக்டர் ஆலோசனை


ஊராட்சி தலைவர்களுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் ஊராட்சி தலைவர்களுன் மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆலோசனை நடத்தினார்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் ஊராட்சி தலைவர்களுன் மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வு கூட்டம்

நீலகரி மாவட்டம் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, ஊராட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஊரக வளர்ச்சித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை செய்து கொடுத்து, பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற வேண்டும்.

சுத்தமான குடிநீர்

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு திட்டத்திற்காவும் இடத்தினை தேர்வு செய்யும்போது ஊராட்சிக்கு சொந்தமான இடமாக அல்லது வருவாய்த்துறைக்கு சொந்தமான இடமாக இருக்க வேண்டும்.

மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் கட்டப்படும் வீடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கி உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடித்தல், ஆகிய திட்டத்தின் கீழ் நடைபெற்ற வரும் பணிகளை கண்காணித்து விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் பொது மக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story