மூத்த வாக்காளர்களை கலெக்டர் கவுரவிப்பு


மூத்த வாக்காளர்களை கலெக்டர் கவுரவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி மூத்த வாக்காளர்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி மூத்த வாக்காளர்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

சர்வதேச முதியோர் தினமாக அக்டோபர் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி சர்வதேச முதியோர் தினத்தையொட்டி அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மூத்த வாக்காளர்களை மூத்த வாக்காளர்களை சந்தித்து சால்வை அணிவித்தும் சான்றிதழ் மற்றும் இனிப்புகள் வழங்கியும் கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் (பொறுப்பு) சுமதி, தேர்தல் துணை தாசில்தார் சரஸ்வதி வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட போஸ்ட் ஆபீஸ் தெருவில் மூத்த வாக்காளர்களான அமிர்தவல்லி (வயது 82), சந்தானலட்சுமி (82) ஆகிய இருவருக்கும் சோளிங்கர் தாசில்தார் (பொறுப்பு) கணேசன் சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்.

அப்போது தேர்தல் பிரிவு உதவியாளர் சோமு, சோளிங்கர் கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால், கிராம நிர்வாக உதவியாளர்கள் சிவா கவிதா, மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story