1 மணி நேரத்தில் கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்


1 மணி நேரத்தில் கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்
x

பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்ட நிலையில் 1 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி சான்று வழங்கினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;


பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்ட நிலையில் 1 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி சான்று வழங்கினார்.

பெட்ரோல் பங்க்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன். இவர் சீர்காழி தாலுகா கடவாசல் கிராமத்தில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கான 11 நிபந்தனைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் பெற்று கலெக்டர், உதவி கலெக்டர் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டு தடையின்மை சான்று வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

புகார் மனு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடையின்மை சான்றுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கிய நிலையில், தற்போது வரை சான்று வழங்கப்படவில்லை. இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதியிடம், சிவச்சந்திரன் ஒரு புகார் மனு அளித்தார்.

1 மணி நேரத்தில்...

இதில் பெட்ரோல் பங்க் அமைக்க தடையின்மை சான்று வழங்க அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக கூறியிருந்தாா்.மனுவை விசாரித்த கலெக்டர் மகாபாரதி சான்றுகள் அனைத்தும் சரியாக இருந்ததால் அடுத்த ஒருமணிநேரத்தில் தடையில்லா சான்றை வழங்கினார். தடையின்மை சான்றை பெற்ற சிவச்சந்திரன் கலெக்டர் மகாபாரதிக்கு நன்றி கூறினார்.


Next Story