மராமத்து செய்யப்படாத வரத்து கால்வாய்கள் விவரங்களை தெரிவிக்கலாம்


மராமத்து செய்யப்படாத வரத்து கால்வாய்கள் விவரங்களை தெரிவிக்கலாம்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் மராமத்து செய்யப்படாத வரத்து கால்வாய்கள் விவரங்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மராமத்து செய்யப்படாத வரத்து கால்வாய்கள் விவரங்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் கூறியுள்ளதாவது:-

தூர்வாரும் பணிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்ற விளைநிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகள் மற்றும் அதன் உள்ளடங்கிய கிராமங்களில் உள்ள வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகள் வேளாண்மை பொறியியல் துறையின் எந்திரங்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோரிக்கை மனு

எனவே, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்குள்ளாக மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்படாத வரத்து கால்வாய் விவரங்களை கோரிக்கை மனுக்களாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளின்படி, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய அனுமதியுடன் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story