மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு முகாம் நடக்கிறது.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவர்களுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்திடவும், அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி வருகிற 4-ந் தேதி போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 5-ந் தேதி பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 11-ந் தேதி நயினார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 13-ந் தேதி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 18-ந்தேதி கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 19-ந் தேதி கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 25-ந் தேதி ஆர்.எஸ்.மங்களம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 7.2.2023 திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 10.2.2023 திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 14.2.2023 மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 16.2.2023 ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ ஸ்மார்ட் அடையாள அட்டை, ஆதார் அட்டை, முதல் -அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, உதவி உபகரணங்கள் பெற பதிவு செய்யப்படும். இந்த உதவிகளை பெற பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இருப்பிடச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம். இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.