28-ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு பணிநாள்
28-ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
திருஉத்திரகோசமங்கை மங்களநாதசாமி கோவில் மரகத நடராஜர் ஆருத்ரா தரிசன திருவிழாவையொட்டி கடந்த 6-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடு செய்யும் பொருட்டு நாளை(சனிக்கிழமை)வேலைநாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 21-ந்தேதி அன்று தை அமாவாசை என்பதால் அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்து அதற்கு பதிலாக வரும் 28-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 28-ந் தேதி வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story