8 ஆயிரத்து 886 மாற்றுத்திறனாளிகளுக்குமாத உதவித்தொகை


8 ஆயிரத்து 886 மாற்றுத்திறனாளிகளுக்குமாத உதவித்தொகை
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1,500 வழங்கும் திட்டத்தின் கீழ் 8 ஆயிரத்து 886 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1,500 வழங்கும் திட்டத்தின் கீழ் 8 ஆயிரத்து 886 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட நபர்களுக்கு தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் ரூ.ஆயிரத்தினை ரூ.1500 ஆக ஜனவரி 1 முதல் உயர்த்தி வழங்கப்படும் என உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் வட்டத்தில் 1583, ராமேசுவரம் வட்டத்தில் 429, திருவாடானை வட்டத்தில் 1033, கீழக்கரை வட்டத்தில் 803, ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 725, கடலாடி வட்டத்தில் 1138, கமுதி வட்டத்தில் 838, முதுகுளத்தூர் வட்டத்தில் 1001, பரமக்குடி வட்டத்தில் 1336 பேர் என மொத்தம் 8 ஆயிரத்து 886 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

நலத்திட்ட உதவிகள்

மேலும், மாவட்டத்தில் 32 ஆயிரத்து 378 நபர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 905 நபர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 467 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 90 ஆயிரத்து 748 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story