புதிய மார்க்கெட் கட்டும் பணி


புதிய மார்க்கெட் கட்டும் பணி
x

திருத்துைறப்பூண்டியில் புதிய மார்க்கெட் கட்டும் பணியை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துைறப்பூண்டியில் புதிய மார்க்கெட் கட்டும் பணியை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

வளர்ச்சி பணிகள்

திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தாா். திருத்துறைப்பூண்டி நகராட்சியின் புதிய பஸ் நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் கட்டுமான பணியை கலெக்டா் பார்வையிட்டாா். அப்போது திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன், நகராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பாண்டியன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், உள்ளிட்டோர் இருந்தனர்.

ஆஸ்பத்திரி

பின்னர் சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவ், நினைவு மண்டபத்தையும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியையும் கலெக்்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் நோயாளிகள் குறித்தும் நோயாளிகளுடன் தங்கி இருப்பவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் ஆஸ்பத்திரியில் மருந்து கொடுக்கும் பகுதி புறநோயாளிகள் பகுதி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். பின்னர் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாலைப்பணி

பின்னர் பழையங்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதையும் அதே பகுதியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தையும், கச்சினம் ஊராட்சியில் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் புதிதாக வகுப்பறைகள் கட்டும் பணிகளையும் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.அப்போது பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, தாசில்தார் மலர்கொடி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

கூத்தாநல்லூர்

இதைப்போல கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆஸ்பத்திரியில் மருந்துகள் இருப்பு, நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் விவரக்குறிப்பு மற்றும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ரகுமானிய தெருவில் உள்ள அஞ்சுககேணி குளத்தை பார்வையிட்ட கலெக்டர், குளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர், அல்லிக்கேணி குளம் சீரமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து கூத்தாநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் சாருஸ்ரீ பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கூத்தாநல்லூர் நகரசபை தலைவர் பாத்திமா பஷீரா, ஆணையர் குமரிமன்னன் மற்றும் அதிகாாிகள் உடன் இருந்தனர்.


Next Story