அரசு கட்டிடங்களை கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு


அரசு கட்டிடங்களை கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு
x

மதுக்கூர் பகுதியில் அரசு கட்டிடங்களை கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூர்

மதுக்கூர்;

மதுக்கூர் அருகே உள்ள படப்பைக்காட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தையும், தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தார். அப்போது அவர் பணியின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு, வருவாய் ஆய்வாளர் பிரபாகர், மதுக்கூர் பேரூராட்சி செயல்அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் வகிதாபேகம் ஹாஜாமைதீன் மற்றும் பலர் இருந்தனர்.


Next Story