சரசுவதிமகால் நூலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு


சரசுவதிமகால் நூலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு
x

தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

சரசுவதிமகால் நூலகம்

தஞ்சை அரண்மனை வளாக சரசுவதிமகால் நூலகத்திற்கு நேற்று நேரில் சென்ற கலெக்டர் தீபக் ஜேக்கப் அங்கு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள பழங்கால பொருட்கள், வரைபடங்கள், புத்தகங்கள், ஓலைச்சுவடிகளை பார்த்த அவர், அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து அங்குள்ள திரையரங்கிற்கு சென்று அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

ஆய்வு

பின்னர் அவர், தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது எத்தனை விண்ணப்பங்கள் இதுவரை வந்துள்ளது என கேட்டறிந்த அவர், மக்களை காக்க வைக்காமல் விரைவாக பதிவு செய்ய வேண்டும் என பணியாளர்களை அறிவுறுத்தினார்.ஆய்வின்போது சரசுவதிமகால் நூலக நிர்வாக அலுவலர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story