சிவகங்கை பூங்காவில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு
தஞ்சை சிவகங்கை பூங்காவில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூர்;
தஞ்சை சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர், தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், வகுப்பறை கட்டிடத்தின் தன்மை குறித்தும் ஆய்வு செய்தார். அதேபோல் தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் காவாளிப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருவதை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அன்பரசு, ஒரத்தநாடு தாசில்தார் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.