உணவு கூடத்தை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு
மன்னார்குடியில் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி தயாரிக்கும் உணவு கூடத்தை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.
மன்னார்குடி;
மன்னார்குடியில் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி தயாரிக்கும் உணவு கூடத்தை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.
காலை சிற்றுண்டி திட்டம்
அரசு பள்ளியில் 1-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டம் வருகிற 15-ந் தேதி(வியாழக்கிழமை) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் முதலில் மன்னார்குடி நகரில் உள்ள 4 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 234 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் வருகிற 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
ரூ.23 லட்சம்
இந்த உணவை தயார் செய்வதற்காக மன்னார்குடி ஜைன தெரு அரசு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.23 லட்சத்தில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சமையல் கூடத்தை நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை சோழராஜன், ஆணையர் சென்னு கிருஷ்ணன், நகர சபை துணை தலைவர் கைலாசம், தாசில்தார் ஜீவானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.