திருவேங்கடம் பகுதியில் கலெக்டர் ஆய்வு
திருவேங்கடம் பகுதியில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவேங்கடம்:
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட சுகாதார துறை சார்பில் திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் குடற்புழு நீக்க உறுதிமொழியை வாசிக்க, தொடர்ந்து அனைவரும் வாசித்து ஏற்றனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி வரவேற்றார். பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெறும் கட்டிட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவேங்கடம் தாசில்தார் அலுவலகம், அரசு இ-சேவை மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் திருவேங்கடம் தாசில்தார் பரமசிவன், துணை தாசில்தார் சாகுல் ஹமீது, வருவாய் ஆய்வாளர் குமார்பாண்டியன், திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் சேர்மதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவா, குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குருவிகுளம் வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமார் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரியப்பன், சுகாதார மேற்பார்வையாளர் குருமூர்த்தி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பொன்னிருளாண்டி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.