மேல்மலையனூரில், 17-ந்தேதி அமாவாசை விழாகோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிஅதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு


மேல்மலையனூரில், 17-ந்தேதி அமாவாசை விழாகோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிஅதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 6:45 PM GMT)

மேல்மலையனூர் கோவில் அமாவாசை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

விழுப்புரம்

மேல்மலையனூர்,

மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) ஆடி அமாவாசை விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வருவதால், அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தற்காலிக பஸ் நிலையமும் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், தற்காலிக பஸ் நிலையம் பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், குற்ற செயல்கள் நடக்காதவாறு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும். சுகாதார துறையினர் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க கிருமிநாசினி தெளிப்பதோடு தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்களை கொண்டு உடனுக்குடன் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, தாசில்தார் பாலசுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story