இல்லம் தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஆய்வு


இல்லம் தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஆய்வு
x

நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்

நாமக்கல்:

இல்லம் தேடி கல்வி திட்டம்

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க இயலாத சுழல் இருந்தது. எனவே தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை வலுப்படுத்தவும், 2 ஆண்டு காலமாக நிலவிய கற்றல் இடைவெளியை போக்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சமுதாய கூடம் போன்ற பொது இடங்களில் போதிய இடைவெளியில் மாணவ, மாணவிகளை அமர வைத்து தன்னார்வலர்களை கொண்டு எளிய முறையில், தினசரி ஒரு மணி நேரம் முதல் 1½ மணி நேரம் வரை கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள இடங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலமாக 4,553 பெண் தன்னார்வலர்கள் மூலம் 62 ஆயிரத்து 83 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு கற்கும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நல்லிபாளையம் அரசு உதவிபெறும் பள்ளியான கலைமகள் பள்ளி இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வரும் வகுப்பினை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து தன்னார்வலர்களிடம் கேட்டறிந்தார்.


Next Story