மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


மல்லசமுத்திரம் ஒன்றியத்தில்  வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

நாமக்கல்

மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

ஆய்வு

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சத்துணவு மைய சமையல் கூடத்தையும், வையப்பமலை பஸ் நிறுத்தத்தில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் சந்தை மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ரூ.7 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் கருங்கல்பட்டி அக்ரஹாரத்தில் அமைக்கப்பட் உள்ள கிணற்றினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமத்துவபுரம் மராமத்து பணி

பருத்திப்பள்ளி சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் வீடுகளில் தரை, ஜன்னல் மற்றும் சுவர்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர்ணம் பூசும்பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும் சமத்துவபுரத்தில் வாழந்து வரும் குடியிருப்புவாசிகளிடம் கலந்துரையாடினார். அவர்களுக்கு முருங்கை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, ராமாபுரம் ஊராட்சியில் ரூ.7 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் கோடங்கி வளைவு பகுதியில் சிறு பாலம் கட்டப்பட்டு உள்ளதையும், கருமனூர் ஊராட்சி, கே.கந்தம்பாளையத்தில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், மங்களம் ஊராட்சியில் பயனாளிக்கு ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் ஆட்டுக்கொட்டகை அமைத்துத்தரப்பட்டு உள்ளதையும், மங்களம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.13 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story