ஆறுகாட்டுத்துறையில் தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணி கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு


ஆறுகாட்டுத்துறையில் தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணி  கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
x

ஆறுகாட்டுத்துறையில் தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

ஆறுகாட்டுத்துறையில் தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

ரூ.150 கோடியில் தூண்டில் முள்வளைவு

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் 500-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளை மழைக்காலங்களில் கடல் சீற்றத்தின் போது பாதுகாத்து கொள்வதற்கு கடற்கரையில் தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.150 கோடியில் தூண்டில் முள் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆய்வு

இந்த பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆறுகாட்டுத்துறையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், தாசில்தார் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், நகராட்சி ஆணையர் ஹேமலதா, ஆறுகாட்டுத்துறை மீனவ பஞ்சாயத்தார்கள் ராஜேந்திரன், முருகையன், மயில்வாகனம், கணக்கர் பழனி உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் உடன் இருந்தனர்.


Next Story