கால்வாய் தோண்டும் பணியை கலெக்டர் ஆய்வு


கால்வாய் தோண்டும் பணியை கலெக்டர் ஆய்வு
x

ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க பெரியகண்மாயில் இருந்து கால்வாய் வெட்டி ஊருணிக்கு வைகை தண்ணீர் கொண்டு செல்லும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க பெரியகண்மாயில் இருந்து கால்வாய் வெட்டி ஊருணிக்கு வைகை தண்ணீர் கொண்டு செல்லும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வைகை தண்ணீர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண் டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு முன் ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அதேபோல ராமநாதபுரம் நகரில் 40 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த சிலைகள் வரும் 2-ந்தேதி ராமநாதபுரம் நொச்சி ஊருணியில் கரைக்கப்பட உள்ளன.

இதற்காக ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முன் ஏற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடும் கோடையால் நொச்சி ஊருணி வறண்டு கிடந்த நிலையில் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீர் கால்வாய் மூலம் கொண்டுவரப்பட்டு நொச்சி ஊருணியில் நிரப்பப்பட்டு வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இதற்காக தூர்ந்து கிடந்த கால்வாயை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரி தண்ணீர் கொண்டு வரப்பட்டது. மேலும் இங்கிருந்து நகரின் மற்ற பகுதிகளில் உள்ள ஊருணிகளுக்கும் தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.


இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய்த்துறை ஆர்.டி.ஓ. சேக்மன்சூர், நகராட்சி தலைவர் கார்மேகம், தாசில்தார் முருகேசன் ஆகியோரும் உடன் சென்றனர்.



Next Story