காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் ஆய்வு
தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட 21 ஊராட்சிகளில் உள்ள 47 தொடக்கப்பள்ளிகளில், 2,812 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உணவு தரம்
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளருமான லால்வேனா இந்த திட்டத்தில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து ஆய்வு நடத்தினார்.
மேலும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் மாவட்ட கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெற செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
ஆய்வின் போது பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், சத்துணவு அமைப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.