கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை

காரைக்குடி,

கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வரும் மேம்பாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மட்டுமல்லாமல் வளர்ச்சி பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாகவும், அதன் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கல்லல் ஒன்றியத்தின் 14-வது நிதிக்குழு மானியம் மற்றும் 15-வது நிதிக்குழு மானியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, எஸ்.ஐ.டி.எஸ். திட்டம், ஒன்றிய பொதுநிதி உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் கடந்த 2019-20-ம் ஆண்டில் மொத்தம் 865 பணிகள் ரூ.2584.29 லட்சம் மதிப்பீட்டிலும், 2020-21-ம் ஆண்டில் மொத்தம் 1328 பணிகள் ரூ.3896.49 லட்சம் மதிப்பீட்டிலும், 2021-22-ம் ஆண்டில் மொத்தம் 1910 பணிகள் ரூ.4716.63 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரேஷன் கடை கட்டிடம்

தளக்காவூர் ஊராட்சியில் 15-வது மானிய திட்டத்தின் கீழ் ரூ.2.34லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் இணைப்பு பணிகள் தொடர்பாகவும், கம்பனூர் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை கட்டிட பணிகள் தொடர்பாகவும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் தொடர்பாகவும், என்.மேலையூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு இடம் தேர்வு செய்யப்படுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சிவராமன், உதவி இயக்குனர் குமார், உதவி திட்ட இயக்குனர் செல்வி, மாவட்ட செயற்பொறியாளர் வெண்ணிலா உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story