தஞ்சை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தஞ்சை ஒன்றியம் மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய கழிவறை கட்டடத்தின் கட்டுமான பணியினையும், புதிய சமையல் கூடம் கட்டிடத்தின் கட்டுமானப் பணியினையும், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
மேலும் தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காக நூற்றுக்கு நூறு என்ற சிறப்பு திட்டத்தை மாவட்ட நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் மாரியம்மன் கோவில் ஊராட்சி அரசு மகளின் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேர்ச்சி சதவீதம்
வரப்போகிற கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதம் நூற்றுக்கு நூறு அமைய வேண்டும் என்பதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கப்படும். மேலும் இப்பள்ளியில் உள்ள சுற்றுச்சூழல் வகுப்பறை. கழிவறை. உணவு கூடம். ஆய்வுக்கூடம், போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் சாலை விரிவாக்கம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது. தஞ்சை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன். மதியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.