கலெக்டர் ஆய்வு
பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை அருகே கலெக்டர் அனீஷ் சேகர் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக மேலமாத்தூர் கிராமத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மகளிருக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சிகளை பார்வையிட்டார். தொடர்ந்து மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்த பெண்களால் தென்னை மற்றும் பனை ஓலைகளை கொண்டு விசிறி தயாரிக்கும் சுயதொழில் பயிற்சி வழங்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
கீழமாத்தூரில் வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்புகளை ஆய்வு செய்தார். அப்போது மதுரை மேற்கு வட்டாட்சியர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, கீழமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்தி துரைப்பாண்டியன், துணைத்தலைவர் சூர்யகுமார், வி.ஏ.ஓ.க்கள் கார்த்திகேயன், முத்துப்பாண்டி, அமுதா, ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.