'ஸ்மார்ட்சிட்டி' திட்ட பணிகள்; கலெக்டர் ஆய்வு


ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள்; கலெக்டர் ஆய்வு
x

தஞ்சையில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

தஞ்சையில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தஞ்சை ஜெபமாலைபுரம் அருகே உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கில் கலவை உரக்கிடங்கின் செயல்பாடு குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், அதே வளாகத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளையும், தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள நுண் உரம் தயாரிப்பு மையம், கண்ணன்நகரில் உள்ள நுண் உரம் தயாரிப்பு மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அவர், தஞ்சை சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், கரந்தை ஜைனா தெருவில் உள்ள ஜைனா குளம், குரந்தை கருணாசுவாமி குளம் ஆகியவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருவதையும், தஞ்சை மேலவீதியில் சாலை புனரமைப்பு பணி குறித்தும் ஆய்வு செய்தார்.

புதிய வகுப்பறை

பின்னர் அவர், கீழவாசல் அழகிகுளம் வாரி தெருவில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், தஞ்சை மானோஜியப்பா வீதியில் பாதாள சாக்கடை ஆழ் இறங்கு கிணறு அமைக்கப்பட்டுள்ளதையும், தஞ்சை பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணி தொடங்கியுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story