அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
தேனியில் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் முரளிதரன் திடீரென்று ஆய்வு செய்தார்.
தேனி
தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, புதிதாக மாணவர் சேர்க்கை ஆகிய விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்தார். பின்னர் அங்கன்வாடி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அந்த ஆய்வின் போது பள்ளி மற்றும் அங்கன்வாடி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், பள்ளி அருகில் உள்ள கடைகளில் உணவுப் பொருட்களின் தரம், காலாவதியான உணவுப் பொருட்கள் குறித்தும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார்.
Related Tags :
Next Story