அரசு பள்ளிகளில் ரூ.1 கோடியில் வகுப்பறை கட்டுமான பணிகள்


அரசு பள்ளிகளில் ரூ.1 கோடியில் வகுப்பறை கட்டுமான பணிகள்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:30 AM IST (Updated: 9 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் ரூ.1 கோடியில் வகுப்பறை கட்டுமான பணிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் ரூ.1 கோடியில் வகுப்பறை கட்டுமான பணிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

புனரமைப்பு பணிகள்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் ரூ.4 கோடியே 50 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் புதிதாக வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

பனங்குடி ஊராட்சி அமிர்தாநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம், அகரகொந்தகை ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டிடம், சியாத்தமங்கை ஊராட்சியில் ரூ.39 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டிடம், திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

திருக்கண்ணபுரம்

திருக்கண்ணபுரம் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டிடம், திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் நர்சரி கார்டன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பனங்குடி ஊராட்சி அமிர்தா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஏனங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆதலையூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.26 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சேகர், திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், பாலமுருகன், உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story