அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார். அப்போது உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, படுக்கை வசதிகள், மருந்துப்பொருட்கள் இருப்பு அறை, பச்சிளம் குழந்தைகள் பிரிவு மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள், தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். மருத்துவமனையை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும், மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளித்து மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் திருப்பத்தூர் அல்லது வேலூர் தலைமை மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என தலைமை மருத்துவர் எஸ்.திலீபன், டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், உதவி ஆணையர் பானு, இணை இயக்குனர் மாரிமுத்து, திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.