கல்குவாரியில் கலெக்டர் ஆய்வு
பெரியகுளம் அருகே கல்குவாரியில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டத்தில் கல்குவாரிகளில் தொடர்ந்து விதிமீறல்கள் நடப்பதாகவும், கேரளாவுக்கு விதிகளை மீறி கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் செயல்படும் கல்குவாரியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அங்கு விதிமீறல் உள்ளதா? அரசு விதிகளை பின்பற்றி கனிமவளங்கள் எடுக்கப் படுகிறதா? என அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கனிமவளத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர், தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். அங்கு காத்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கு செயற்கை கால் பொருத்தப்பட்ட நிலையில் அமர்ந்து இருந்த மாற்றுத்திறனாளியிடம் கலெக்டர் விசாரித்தபோது, ஊன்றுகோல் வேண்டி மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக அவருக்கு ஊன்றுகோல் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அவருக்கு உடனடியாக ஊன்றுகோல் வழங்கப்பட்டது.