அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலத்துறை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தார். பின்னா் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தக பிரிவு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வருகை பதிவேடு
மேலும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருகிறார்களா? என வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் இந்த மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.
ஆய்வின் போது வேலூர் தாசில்தார் செந்தில், கல்லூரி டீன் பாப்பாத்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.