கடலூர், குறிஞ்சிப்பாடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கலெக்டர் ஆய்வு
கடலூர், குறிஞ்சிப்பாடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும் கடலூர் முதுநகர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தை நேற்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஒழுங்கு விற்பனைக்கூடத்திற்கு விற்பனைக்கு வந்த விளைபொருட்கள் மூட்டைகள், சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்கள், மூட்டைகள் குறித்தும் மற்றும் இ -நாம் பரிவர்த்தனை பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
சேமிப்பு கிடங்கு
அதையடுத்து இ- நாம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துமாறு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் 500 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். முன்னதாக சேமிப்பு கிடங்கை சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து குறிஞ்சிப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், இ-நாம் பரிவர்த்தனை பணிகள் குறித்தும், இ-நாம் தரம் பிரித்தல் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து, இ-நாம் திட்டத்தின் மூலம் பயனடைந்த விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அதன்பிறகு மணிலா உடைப்பு எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். விற்பனைக்கு வந்த விளைபொருட்கள் மூட்டைகள், சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருள் மூட்டைகள் குறித்து ஆய்வு செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ள 700 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு படிக்கட்டுகள் மற்றும் உட்புற சுவர்களில் மராமத்து பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.