புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு


புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
x

புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஒன்றியம் நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமினை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து அம்மனாங்கோயில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் காட்டூர் பனம்தோப்பு பகுதியில் குறுங்காடுகள் அமைக்கும் பணியை ஆய்வு செய்து, மரக்கன்றுகள் நட்டார்.

தொடர்ந்து புதுப்பேட்டை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அப்துல் கலாம் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து புதுப்பேட்டை அரசு சமுதாய சுகாதார மருத்துவமனையில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து உடல் பரிசோதனை செய்து கொண்டார். அதன் பிறகு ரத்த தான முகாமில் கலெக்டர் பங்கேற்று ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.

ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதீஷ்குமார், சுகாதார பணி துணை இயக்குனர் செந்தில், ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, டாக்டர் சுமன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், மாவட்ட ரத்த வங்கி அலுவலர் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story