தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
குத்தாலம் :
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 07.06.2023 முதல் ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில் மூன்றாம் நாளான நேற்றுமுன்தினம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேற்படி ஆய்வின் போது ஜமாபந்தி தினத்தன்று வரப்பெற்ற மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திடவும் எதிர்வரும் நாட்களில் பொதுமக்களிடம் அதிக அளவில் விளம்பரம் செய்து மனுக்களை பெற்று பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திடவும் தாசில்தாரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது ஜமாபந்தி அலுவலரும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அம்பிகாபதி, குத்தாலம் தாசில்தார் இந்துமதி, தனி தாசில்தார்கள் காந்திமதி, சண்முகம், பிரான்ஸ்வா, துணை தாசில்தார்கள் பாபு, ராஜன், வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், ஜெயந்தி, ஷர்மிளா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்மோகன், சண்முகம், சங்கர் மற்றும் பிற துறை அலுவலர்கள் உடனிருந்தனர். இதேபோல் மடப்புரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், தொடக்கப்பள்ளியின் சமையலறை கட்டிடம் பழுது நீக்கம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.