வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு


வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
x

வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், நிலுவை பணிகள், அலுவலகத்திற்கு வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள், சாலை பணிகள் விவரம், கட்டிட பணிகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், முடிக்கப்படாமல் உள்ள பணிகளை உடனடியாக முடிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களின் முன்னேற்றம், அடிப்படை சான்றிதழ்கள், நில அளவைக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பொதுமக்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கவும், நில அளவு, உட்பிரிவு போன்றவைகளுக்கு மனு கொடுத்த பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நாராயணன், கோட்டாட்சியர் (பொறுப்பு) பால்பாண்டி, வேப்பந்தட்டை தாசில்தார் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story