வீரபாண்டியன்பட்டினம்ரேஷன்கடையில் கலெக்டர் ஆய்வு
வீரபாண்டியன்பட்டினம்ரேஷன்கடையில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
'நம்ம பகுதி நம்ம கடை' திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் தாலுகா ஆலந்தலை, வீரபாண்டியன்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ரேஷன்கடையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடும்ப அட்டைதாரர்கள் விபரம், பொருள்கள் இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததுடன் நுகர்வோரிடம் பொருட்கள் வினியோகம் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், வட்ட வழங்கல் அலுவலர் பாலசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story