அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு


அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
x

வாலாஜா அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டு, பெண்கள் வார்டு, மருந்தகங்கள், இயற்கை வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு, சமையல் அறையை பார்வையிட்ட கலெக்டர் அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி மற்றும் உணவு தயார் செய்வதற்கான பொருட்களின் தரங்கள் குறித்து கேட்டறிந்து, சுகாதாரமான முறையில் உணவுகளை தயார் செய்வது குறித்து சமையல் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை ஆய்வு செய்த அவர் மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு தேவைப்படுகின்ற தேவைகள் குறித்து கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story