மாணவர்கள் விடுதியில் கலெக்டர் ஆய்வு


மாணவர்கள் விடுதியில் கலெக்டர் ஆய்வு
x

நாட்டறம்பள்ளி மாணவர்கள் விடுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் உள்ள சமையலறை, மாணவர்கள் தங்கும் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டு மாணவர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவுகளை தயார் செய்து வழங்க வேண்டும் என சமையலருக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் விடுதி சுற்றுப்புறத்தில் உள்ள இடங்களை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் உத்தரவிட்டார். ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் ஹரிதாஸ், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் த.பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story