காவிரி- அரசலாறு தடுப்பணையை கலெக்டர் ஆய்வு


காவிரி- அரசலாறு தடுப்பணையை கலெக்டர் ஆய்வு
x

காவிரி- அரசலாறு தடுப்பணையை கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே மேட்டுத்தெருவில் கட்டப்பட்டு வரும் காவிரி-அரசலாறு தடுப்பணையை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெருவில் காவிரியிலிருந்து அரசலாறு பிரிகின்றது. இந்த காவிரி ஆற்றின் மூலம் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கரும், அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

இந்த காவிரி-அரசலாறு பிரியும் அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல்வேறு பணிகளுக்காக பொதுப்பணித்துறை மூலம் நீட்டித்தல், விரிவாக்குதல், புணரமைப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்தப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

இந்த நிதியின் ஒரு பகுதியில் காவிரி-அரசலாறு பிரியும் பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியினை நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாய்க்காலை தூர்வார உத்தரவு

அதேபோல் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூரில் தூர்வாரப்பட்டு வரும் வாய்க்காலையும் பார்வையிட்ட அவர், இந்த வாய்க்காலில் மீதமுள்ள 800 மீட்டரையும் தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியாளர்கள் முத்துக்குமார், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story