வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
செங்கம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
செங்கம்
செங்கம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் நேரடி ஆய்வு செய்தார். அப்போது செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரியமங்கலம் ஊராட்சி கோணாக்குட்டை,சுண்டக்காபாளையம், கரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்குகள், தற்போது போடப்பட்டு வரும் சாலைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார், வருவாய்த் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.
Related Tags :
Next Story